Categories
மாநில செய்திகள்

“கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி”….. இனி இப்படி செய்யக் கூடாது….. கோர்ட் அதிரடி உத்தரவு…..!!!

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் காட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்களின்போது ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்  நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தமிழ்ச்செல்வி பல நிபந்தனைகளின் அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.  அதில் “ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும். எந்த பிரச்சினையும் வராது என்று மனுதாரர் தரப்பில் உறுதி கொடுக்க வேண்டும். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, ஆபாச நடனங்கள் இருக்கக் கூடாது. மீறி ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருந்ததால் சம்பந்தப்பட்ட போலீசார் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தி சட்டரீதியாக முடிவு எடுக்கலாம்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |