Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாக்கள்….. மகிழ்ச்சியில் தாரை தப்பட்டை கலைஞர்கள்….!!

கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் தாரை தப்பட்டை கலைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் கோவில்களில் திருவிழாக்கள் கலை கட்டியுள்ளது.

இதனால் மேளம், தாரை தப்பட்டை கலைஞர்கள், பூ வியாபாரிகள், பந்தல் அமைப்பவர்கள், ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் போன்ற தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து தாரை தப்பட்டை கலைஞர்கள் கூறியதாவது, ‌ கடந்த 2 வருடங்களாக வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். இதனால் வருமானம் இன்றி குடும்பத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் திருவிழாக்கள் தொடங்கியதால் எங்களுக்கு வேலை வாய்ப்பு வந்துள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரமும் திரும்பியுள்ளது எனக் கூறினர்.

Categories

Tech |