Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல்”… சமாதானம் செய்ய வந்த பெண் கொலை…!!!

துறையூர் அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது சமாதானம் செய்ய வந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தில் இருக்கும் கோவில் ஒன்றில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று சாமி வீதி உலா செல்வதற்காக அலங்கரிக்கப்பட்டு சுவாமியை டிராக்டரில் ஏற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதனால் அப்பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவர் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இரு தரப்பினரும் சிவகாமியை பிடித்து கீழே தள்ளியதால் பலத்த காயமடைந்த சிவகாமி மயக்கமடைந்தார். சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் தலைமையிலான போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள். இதுபோல அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

 

Categories

Tech |