Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கோவில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே தகராறு”…. 12 பேர் காயம்….!!!!!

கோவில் விழாவின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் 12 பேர் காயமடைந்தார்கள்.

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே இருக்கும் வாலாந்தூரில் அங்காள ஈஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 48 ஆம் நாளான நேற்று முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள்.

இதில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள். பின் படுதாயம் அடைந்த மலர்விழி, சங்கிலி, பாண்டி, ஜெயபாண்டி, கல்யாணி, வீரராகவன், கீர்த்திராஜா , பாண்டி, ராஜா, தமிழரசு, வயக்காட்டுசாமி, ராஜா உள்ளிட்ட 12 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். பின் போலீசார் இருப்பு தரப்பை சேர்ந்த பலர் மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.

Categories

Tech |