6 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் மீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மீனாள் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மீனாள் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மீனாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.