பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள வையாபுரி பட்டியில் சிறைமீட்ட அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் தமிழ்நாடு ஏறுதழுவுதல் நலச்சங்கம் சார்பில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆறுமுகம் பூமிநாதன் தொடங்கி வைத்த பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டது. போட்டியில் சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி பந்தயத்தின் இறுதியில் முதல் பரிசை காஞ்சனா தேவி மற்றும் அஜ்மல்கான் வண்டி பெற்றுள்ளது. இரண்டாவது பரிசை விபிலன் வண்டி பெற்றுள்ளது.
மூன்றாவது பரிசை யாஷிகா வண்டி பெற்றுள்ளது. நான்காவது பரிசை செந்தில்குமார் வண்டி பெற்றுள்ளது. ஐந்தாவது பரிசை இனியா வண்டி பெற்றுள்ளது. மேலும் வெற்றி பெற்ற மாட்டுவண்டியின் உரிமையாளர்களுக்கு ஏறுதழுவுதல் சங்க மாவட்ட தலைவர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில பொதுக்குழு உறுப்பினரான கார்த்தி, பிரபாகரன், அரசு மற்றும் கணேசன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.