ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிஅறிக்கை வெளிட்டுள்ளார். அதில், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பாக சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக வருகின்ற 21 ஆம் தேதி, 22ஆம் தேதி மற்றும் 28ஆம் தேதி ஆகிய தினங்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபிசெட்டிபாளையம், கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடத்திலிருந்து பண்ணாரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதைப்போன்று பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மண்டலம் சார்பாக இன்று வியாழக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை ஈரோடு, அந்தியூர், கொடிமுடி, கரூர், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பேருந்து வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.