கோவில் கோபுரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகில் வளையப்பட்டியில் வசித்து வந்தவர் தொழிலாளி ராஜா (30). இவர் குன்றாண்டார் கோவில் திருவிழாவிற்காக கோபுரத்தில் ஏறி மின் விளக்குகளை பொருத்தினார். அதன்பின் கீழே இறங்கும் போது எதிர்பாராவிதமாக தவறி விழுந்துவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுமையா வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.