கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு அறநிலைத்துறை அதிகாரிகள் உணவு வழங்கினார்கள்.
திருச்சி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் இந்து சமய பெரிய கோவில்களில் மூலம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், உணவு பொருட்கள மற்றும் முக கவசம் போன்ற பொருள்களை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் மேற்கூறிய பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் தலைமை பொறுப்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் ரெங்கா கோபுரம் அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், முககவசம், கபசுரக் குடிநீர் போன்றவற்றை ஸ்ரீரங்கத்தின் ரங்கநாதர் கோவில் சார்பாக கோவில் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். மேலும் அம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் அவருடன் இருப்பவர்களுக்கும் உணவு பொட்டலங்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.