தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2 குழுக்களை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தார்.
இந்தநிலையில் கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்க அரசின் உள்துறை வருவாய்த்துறையின் ஒருங்கிணைப்பு அவசியம். மேலும் 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.