Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கோவில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள சின்ன நீலாங்கரையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சக்தி முத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது கடந்த 1963-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இதேப்போன்று சேலத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலம் கடந்து 2015-ம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து கழகம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஹைகோர்ட்டில் அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கோவில் நிலங்களை பிற பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், கோவில் பயன்பாட்டை நிலங்களை கோவில் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். எனவே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் கூறியிருந்தது சரிதான் என்று தீர்ப்பளித்தார். மேலும் இந்து அறநிலையத்துறையானது கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Categories

Tech |