சென்னையில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, “கோவிலுக்கு சொந்தமான பல்வேறு நிலங்களை சில நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்து சுற்று சுவர் எழுப்பி உரிமை கொண்டாடி வருகின்றன. அதோடு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் கோவில் நிலங்களை நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிறுவனங்கள் போதுமான அளவு வருமானம் ஈட்டும் போதிலும் கோவில் நிலங்களுக்கான வாடகையை கொடுப்பதில்லை. இதனால் பல கோவில்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே இவ்வாறான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்டு தரவேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.