Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோவில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டம்”…. நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு…!!!

மல்லூர் அருகே கோயில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தார்கள்.

சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் அருகே இருக்கும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமாக தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அங்கு பழமையான மரம் ஒன்றும் அருகிலேயே கருப்பசாமி கோவிலும் இருக்கின்றது. அந்த நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் கருப்பு சாமி கோவிலை வேறு இடத்தில் மாற்றி வைத்து விட்டு அந்த பழமையான மரங்களை வெட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டார்கள். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை வெட்ட முயன்றவர்களிடமிருந்த எந்திரத்தை பறிமுதல் செய்து மரத்தை வெட்ட கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள்.

வருவாய்த்துறையினர் எச்சரித்தும் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத்தொடர்ந்து வேறு இடத்தில் வைக்கப்பட்ட சாமி சிலையை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வந்து பூஜை செய்து வழிபட்டதோடு வெட்டப்பட்ட மரத்தை மீண்டும் அதே இடத்தில் நட வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக அமைச்சர் கே.என்.நேரு செல்வதாக தகவல் கிடைக்க மக்கள் அவரின் காரை மறித்து மனு அளித்தார்கள். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் இதுபற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் கார்மேகத்திற்கு உத்தரவிட்டார். இதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |