கேரளாவில் கோவில் முன்பு ஆபாசமாக போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோவில் முன்பு மாடலுக்காக ஆபாச போஸ் கொடுத்த பெண்ணின் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால் அது கோவில் இல்லை என்றும், கோவில் போன்று அமைக்கப்பட்ட செட் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.