பள்ளிகொண்டா அருகே இளம்பெண் ஒருவர் கோவில் முன்பு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே உள்ள ராமாபுரம் சாலையில், திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பமரம் ஒன்றில் இன்று காலை பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்ட பெண் யார் என்றும் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.