Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவில் யானை குறித்து பரவும் தகவல்….. விளக்கம் அளித்த அதிகாரி…. சமூக வலைத்தளத்தில் வைரல்….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுடைய பெண் குட்டி யானையை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த யானை ஜெயமாலையாதா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் யானை தினமும் ஆண்டாளை தரிசிப்பது வழக்கம். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது யானை முன்னே செல்லும். தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் யானை தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு பாகன்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து 10 லட்ச ரூபாய் செலவில் யானைக்கு கிருஷ்ணர் கோவிலில் தனி மண்டபம் அமைக்கப்பட்டது. அங்கு நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே யானை தாக்கப்பட்டதை காரணமாக வைத்து அசாம் மாநிலத்திற்கு யானையை அதிகாரிகள் பிடித்து சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதனை பார்த்த கோவில் அதிகாரி ஒருவர், ஆண்டாள் கோவிலில் தான் யானை இருக்கிறது எனவும், யாரும் அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறினார். மேலும் யானை குறித்து தவறாக வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |