தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும். இந்நிலையில் கோயில்களின் வரவு செலவு கணக்குகளை மக்கள் அறியும் வகையில் ஜூலை 15-ஆம் தேதிக்குள் வெளியிட அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயில் நிலங்களில் விவரங்கள் வெளியான நிலையில் வரவு செலவு கணக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.