இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் சேகர் பாபு கோவில்களின் வாடகைதாரர்கள் இணையவழியில் சுலபமாக வாடகை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இணைய வழியில் வாடகை செலுத்த இயலாதவர்கள் வழக்கம்போல் வாடகை தொகையை கோவில் அலுவலகத்தில் செலுத்தி கம்ப்யூட்டர் வாயிலாக ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும் தற்போது குத்தகை, வாடகை தொகையை காசோலை வாயிலாக செலுத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வாடகைதாரர்கள் வங்கி கணக்கில் காசோலைக்குரிய தொகை இல்லையெனில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அதற்கு உட்படுவதற்கான கடிதத்துடன் வாடகைதாரர்களுக்கு காசோலையை வழங்க வேண்டும். குத்தகை, வாடகை தொகையை வசூலிக்கும் போது காசோலையில் அன்றைய தேதி மட்டுமே குறிப்பிட்டு பெற வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் பின் தேதியிட்ட காசோலையை பெறக்கூடாது. அதேபோல் அலுவலர்கள் கோவில் கணக்கிற்கு பணம் வரும் வரை ரசீதை வழங்கக்கூடாது. இனிவரும் காலங்களில் குத்தகை, வாடகை தொகையை காசோலை வாயிலாகவும், இணைய வழியிலும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.