Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில், வீடு இடித்து அகற்றம்…. எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற தாய்-மகள்….. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை ஆவடியில் உள்ள கண்ணப்பாளையம் பகுதியில் கைத்தியம்மன் கோவில் அருகில் உள்ள தாமரை குளத்தின் கரையோரம் இவர் நாகபத்ரகாளியம்மன் புற்று கோவில் உள்ளது. இந்த கோவிலை ஜெயலக்ஷ்மி என்பவர் கட்டி அதன் முன்புறம் 8 அடி உயரமுள்ள காளி சிலையை வைத்து பராமரித்து வருகிறார். இவருக்கு மகள்கள் சசிகலா(28) மற்றும் சுகன்யா(27) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த கோவிலை ஜெயலட்சுமியின் பாட்டி, தாய் தற்போது அவர் என்று 3 வது தலைமுறையாக 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவிலை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் கோர்ட் உத்தரவுபடி பூந்தமல்லி தாசில்தார் செல்வம் தலைமையில் வருவாய்துறையினர் ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து கோவில் மற்றும் வீடு இரண்டையும் பொக்லைன் இயந்திர மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு தாய் மற்றும் மகள்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இது கோர்ட் உத்தரவு என்று கூறி விட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயலட்சுமி அருகில் இருந்த தாமரை குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி அவரை பத்திரமாக மீட்டனர். அதே நேரத்தில் ஜெயலஷ்மியின் இரண்டாவது மகளான சுகன்யா தங்களது கோவில் வீடு இடிக்கப்பட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை சென்னையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் வருவாய் துறை அதிகாரிகள் கோவில், வீடு மற்றும் கோவிலுக்கு வெளியே சிமெண்டால் வைக்கப்பட்டிருந்த 18 அடி உயரம் சூலாயுதம் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளிவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |