உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனா ஒரு பக்கம் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் முறை, இரண்டாம் முறை இடையே தடுப்பூசி செலுத்தும் அவகாசத்தை 6 முதல் 8 வாரம் நீட்டிக்க வேண்டும். இரண்டாம் முறை தடுப்பூசி போடும் அவகாசத்தை நீட்டிக்கும் போது அதிக அளவில் பயன் அளிப்பதாகவும், விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.