கோவையில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 13 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய 5 பேரை கைது செய்தார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகள் மோட்டார் சைக்கிளில் தலா 1 மூட்டை வீதம் 2 மூட்டைகள் என அரசால் தடை செய்யப்பட்ட 13 புகையிலை மூட்டைகள் இருந்தது.
இதை தொடர்ந்து நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நிசார், உமர் பாரூக், கோபிநாத், பிரவீன் என்பது தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் நால்வரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்கள்.
பின் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கோவையில் இருந்து கோபாலபுரத்திற்கு புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாகவும் இந்த கடத்தலில் கோபாலபுரத்தைச் சேர்ந்த மனோஜ் குமார், கணேசன் உள்ளிட்ட இருவருக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்தவர்கள் வாக்குமூலம் அளித்தார்கள். அதன் பேரில் போலீசார் மனோஜ் குமாரை கைது செய்து தலைமறைவாக இருக்கும் கணேசனை தேடி வருகின்றார்கள்.