மாவட்ட ஆட்சியர், கோவை காவல் ஆணையர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது..
கோவையில் கடந்த 2 தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது.. நேற்று முன்தினம் பாஜக அலுவலகத்தில் வீசப்பட்ட பெட்ரோல் பாட்டில் குண்டை தொடர்ந்து, அடுத்தடுத்து கோவை புறநகர் மற்றும் நகர பகுதிகளில் மொத்தம் 8 இடங்களில் பெட்ரோல் பாக்கெட் வீச்சு மற்றும் பாட்டில் குண்டு வீழ்ச்சி என்பது நடைபெற்று வந்தது. இந்து அமைப்புகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் வீடுகளிலும், கடைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஒரு பதற்றமான சூழல் கோவை முழுவதும் நிலை வருகிறது.
இந்த சூழலில் கோவைக்கு நேற்று காலை அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மற்றும் கமெண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர்.. மேலும் 1,400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள், பதற்றத்தை தணிப்பது குறித்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாவட்ட ஆட்சியர் சமீரன் மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், எஸ்பி பத்ரிநாத் உள்ளிட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.. அதாவது, இந்து மற்றும் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.