Categories
மாநில செய்திகள்

கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்…. சமூக ஆர்வலர்கள் கண்டனம்…!!!

நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு அதிக அளவில் திருமணம் நடைபெறுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 41 குழந்தைகளுக்கு திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெற்றோர்களை இழந்து வசித்து வரும் சிறுமிகளை இந்த குழந்தை திருமணத்தில் அதிகம் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா காரணமாக தாய் தந்தைகளை இழந்த குழந்தைகள், உறவினர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளன.

Categories

Tech |