Categories
மாநில செய்திகள்

கோவையில் இன்று முதல்… அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக முதல்வர் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கொரோனா ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இன்றும், நாளையும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகை கடை, துணிக்கடை, பூங்காக்கள், மால்கள் போன்றவை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியில் வரும் மக்கள் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |