Categories
மாநில செய்திகள்

கோவையில் கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தியுள்ளது .

இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், கோவையில் திருமண மண்டபங்களில் நிகழ்சிகளை நடத்த ஒரு வாரம் முன்பே வட்டார்சியரிடம் அனுமதி பெற வேண்டும். 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி, இதர நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |