கோவையில் போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட ஸ்விகி ஊழியரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நலம் விசாரித்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,”கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ் , ஸ்விகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது.
காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம்பெற வாழ்த்தினேன், “என கூறப்பட்டுள்ளது.