Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் சோகம்…! மகன் இறந்ததால்….. உடலில் துணியை கட்டிகொண்டு தம்பதியினர் தற்கொலை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(62), தனலட்சுமி (59) தம்பதி. இவர்களது மகன் கனீஷ் பிரபாகர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்ததால் இருவரும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி திடீரென்று இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் உடலில் துணியைக் கட்டிக்கொண்டு, ஒன்றாக கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிகாலை இருவரது உடல்களும் கரை ஒதுங்கிய நிலையில், கடலோர காவல் குழும போலீசார் கோவிந்தராஜின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை கொண்டு விசாரித்தபோது அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது உறவினர்களுக்கு கோவிந்தராஜ் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தாங்கள் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தங்களது சொத்துக்களை மகன் பெயரில் அறக்கட்டளை துவங்கி நற்பணிகளை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |