Categories
மாநில செய்திகள்

கோவையில் தேர்தல் முறைகேடு…. நாளை (பிப்..22) விசாரணை…. சென்னை உயர்நீதிமன்றம்…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்…19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுதாக்கல் நடைமுறைகள் முடியும் பட்சத்தில் நாளை (பிப்ரவரி 22) வழக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |