கோவையில் அடுத்தடுத்து 7 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் பாஜக ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதற்கிடையில் கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு, வாகன சோதனை, கூடுதல் சோதனை சாவடிகள், கமாண்டோ படை என அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகரில் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22 ஆம் தேதி 8:30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த விவாகரத்தில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153a, 285 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்று தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டோம். நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், தொழில்நுட்ப உதவியுடன் கூடிய புலன் விசாரணை, சாட்சியங்களில் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் சதாம் உசேன் என்ற நபரை துடியலூர் பகுதியில் கைது செய்து அவருடன் வந்தவரை தீவிரமாக தேடி வருகிறோம். இதனையடுத்து சதாம் உசேனை விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துவோம். இவர்கள் எப்படி திட்டம் போட்டு சம்பவம் செய்தார்கள், இதில் வேறு யாருக்காவது சம்பந்தம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இந்திய தண்டனை சட்டப்பிரிவு 436 எக்ஸப்லோசிவ் வழக்குகளை இணைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சதாம் உசேன் துடியலூர் பகுதி பிஎப்ஐ பொறுப்பாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதையும் விசாரித்து வருகிறோம். கோவை மாநகரில் இதுவரை மூன்று வழக்குகளை கண்டுபிடித்து இருக்கிறோம். இவர்களுக்கு 100 அடி சாலையில் நடந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.