கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, அரசு வாகனங்கள் மீது கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக சென்னையில் இருக்கும் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் சென்னையில் இருக்கும் பல முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன்படி எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது.