Categories
மாநில செய்திகள்

கோவையில் பொருநை கண்காட்சி…. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!!

கோவை, நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். கோவையில் நடக்கவுள்ள 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

இந்நிலையில் கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை’ அகழ்வு ஆராய்ச்சி கண்காட்சி இன்று தொடங்கப்படவுள்ளது .கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார். அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

Categories

Tech |