Categories
மாநில செய்திகள்

கோவையில் முதலீட்டாளர் மாநாடு…. 52 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரண்டாம் நாள் பயணமாக கோவை சென்றார். அங்கு  முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு ரூ.455 கோடியில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் வானொலி மற்றும் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த திறன் மிகுந்த மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |