Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் 252 கோடியில் மூன்று மேம்பாலங்கள்”… ஜூலை மாதத்தில் தொடங்கும் பணிகள்…!!!!

கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது.

கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக 252 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. அவை கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.140 கோடியே 80 லட்சம் மதிப்பிலான மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. சாய்பாபா காலனி சந்திப்பில் ரூ.50 கோடியே 93 லட்சம் மதிப்பில் 1.14 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது.

இந்த மூன்று மேம்பாலங்களுக்கும் மொத்தமாக 252 கோடி மதிப்பில் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் கட்டும் பணியானது வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மேம்பாலங்கள் கட்டப்பட்டால் திருச்சி ரோடு, காளப்பட்டி ரோடு, சாய்பாபா காலனி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலானது குறையும்.

Categories

Tech |