Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் 280 பயனாளிகளுக்கு ரூ.38 1/2 லட்சம் நலத்திட்ட உதவிகள்… கலெக்டர் வழங்கினார்…!!!!

கோவை அருகே பேரூர் மாதம்பட்டி ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய போது கோவை மாவட்டத்தில் கடந்த மாதங்களில் வால்பாறை மேட்டுப்பாளையம் சூலூர் போன்ற பகுதிகளில் மக்கள் தடுப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான உதவி தொகைகளும் 8 14களுக்கு ரூபாய் 38 ஆயிரத்து 968 செலவில் விலையில்லா சலவை இயந்திரங்களும் தோட்டக்கலை துறை சார்பில் ஆறு பயனாளிகளுக்கு 4.86 லட்சத்தில் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதை தவிர மகளிர் சுய உதவி குழுக்கள் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் உட்பட மொத்தம் 280 பயனாளிகளுக்கு ரூபாய் 38 லட்சத்து 51 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 24 ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் மாபெரும் அரசு விழா நடைபெற இருக்கின்றது. இந்த விழாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது என அவர் பேசியுள்ளார். மேலும் முகாமில் கோவை ஆர்டிஓ இளங்கோ உதவி இயக்குனர் கமலக்கண்ணன் மாதம்பட்டி ஊராட்சி தலைவர் முத்துராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |