Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு …!!

கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவையில் நாளை முதல் 27ஆம் தேதி வரை 3 நாள் முழுக்க மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு ஒரு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மூன்று நாட்களுக்கு முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாரம் வாரம் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது தமிழகம் முழுவதும் இருந்து இருக்கிறது. அந்த சூழலில் கோவையிலும் அதேபோல் நடைமுறையில் தான் கடந்த ஒரு மாதமாக பின்பற்றபட்டது.ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் என்பதால் சனிக்கிழமை மாலை பல்வேறு இடங்களில் கடைகளில், முக்கியமாக இறைச்சி கடைகளில் அதிகமான கூட்டங்கள் காணப்பட்டு வந்தன.

இதனால் கோவை மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6 மணி முதலே இந்த முறை முடக்கம் என்பது அமலுக்கு வருகின்றது என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த பொதுமுடக்கத்தை பொறுத்தவரை 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது ஞாயிற்றுக் கிழமை முழு முடக்கம் என்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பித்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த முழு முடக்கம் என்பது இருக்கிறது. இதனால் கொரோனா வெகுவாகக் குறைக்க முடியும் என்பது மாவட்ட நிர்வாகத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.

Categories

Tech |