தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் காலை 11 மணி முதல் 47 வார்டுகளில் கோவிஷில்டு தடுப்பூசி போடப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் விடுபட்டுள்ள வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.