கோவை செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கடந்த 1752 ஆம் வருடம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்பாகவே துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கோவை அரசு கலைக் கல்லூரியில் பிஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், பாதுகாப்பியல், சுற்றுலாவியல், அரசியல், அறிவியல், பிஎஸ்சி கணிதம், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், உளவியல், புவியியல், பிகாம், பிகாம் சிஏ, போன்ற 23 இளநிலை பட்டப்படிப்பு முதுகலை படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது.
இதனை தவிர 16 பாடப்பிரிவுகளில் எம்ஃபில் மற்றும் பிஹெச்டி படிப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது. மேலும் கோவை அரசு கலைக் கல்லூரி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருக்கின்றனர். மனு அளிக்க கல்லூரியிலிருந்து கூட்டமாக வந்த மாணவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களின் நலன் மற்றும் கல்லூரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் யுஜிசி போன்ற பலவற்றில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது விசாரணை மேற்கொள்வதற்கு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த ஆறு மாதங்களாக பாடங்கள் எதுவும் நடத்தாமல் இருந்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்க்கு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.