கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம் ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கண்காணிப்பு மையத்தின் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஆட்சியரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கண்காணிப்பு மையத்தால் பாதிப்பு யாருக்கும் ஏற்படாது என ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.