கோயம்புத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கட்சியானது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர்கள் அனைத்து வசதிகளையும் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே செய்து வந்ததுதான். இதனால் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி பயங்கர தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் சக்ரபானியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார். இவரின் கடின உழைப்பின் காரணமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கட்சியானது அமோக வெற்றியை பெற்றது.
இந்நிலையில் மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை மேயர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து வந்தனர். ஆனால் தி.மு.கவோ சமூக சேவை செய்து வந்த கல்பனா ஆனந்தகுமாரை மேயராகவும், வெற்றி செல்வனை துணை மேயராகவும் நியமித்தனர். இதற்கிடையே தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜியை மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான பல உள்ளீடு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இது தொடர்பான தகவல்கள் தி.மு.க தலைமைக்கு தெரிய வரவே, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரே நாளில் 70 பணிகளை தொடங்கி வைத்து மாவட்டத்தை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இதனையடுத்து மேயர் கல்பனாவிற்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்பியுள்ளனர். அதாவது மேயருக்கு ஆதரவாக அவருடைய கணவர் இருப்பதாகவும், மேயருக்கு போன் செய்தால் அவருடைய கணவர் போனை எடுத்து பேசுவதாகவும், கணவர் எப்போதும் மேயருடனே இருக்கிறார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
இதனையடுத்து மேயர் கவுன்சிலர்களை சரியான முறையில் அணுகுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் அமைச்சர் செந்தில்பாலாஜி கவனத்திற்கு மேயர் எடுத்துச் சென்றுள்ளார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று கூறி மேயருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சமீபத்தில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் மேயரை பேசவிடாமல் முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவருடைய மனைவியும் மாறி மாறி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த தகவல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தெரியவரவே, ராஜினாமா செய்ய விரும்பும் கவுன்சிலர்களிடம் உடனடியாக எழுத்துப் பூர்வமாக ராஜினாமா கடிதத்தை எழுதி கடிதம் வாங்கிக் கொள்ளுமாறு மேயரிடம் தெரிவித்துள்ளார். இதை மேயர் கவுன்சிலரிடம் தெரிவிக்க நா,ங்கள் விளையாட்டாக கூறியதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி கவுன்சிலரிடம் கதிகலங்கி உள்ளனர். இதன் காரணமாக பயம் காட்டிய கவுன்சிலர்களை ஒரு நிமிடத்தில் கதிகலங்க வைத்த கோவை மேயர் தி.மு.க வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டார்.