Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “ஆத்தா சாபத்துக்கு ஆளாகாதீங்க”….. கோவிலில் வைரலாகும் பேனர்….!!!!

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினங்களிலும் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செய்வார்கள்.

தங்களது முன்னோர்களுக்கு பவானியாற்றங்கரையோரத்தில் திதி கொடுத்தும் ஆசி பெற்றுச்செல்வதும் வழக்கமாக உள்ளது. அப்போது சிலர் குளித்து விட்டு தங்களது உடைகளை ஆற்றில் வீசிவிட்டு சென்று விடுகின்றன. இதனால் நீர் மாசு படுவதோடு அதில் இருக்கும் மீன்களும் செத்து விடுகின்றது. இதனால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், “அம்மனோட சாபத்திற்கு ஆளாகாதீங்க, உடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை ஆற்றில் போடாதீங்க குப்பைத் தொட்டியில் போடுங்க, பழைய ஆடைகளும் ஏழைகளுக்கு பயன்படும், குப்பைகளை ஆற்றில் போடுபவர் அம்மனின் குற்றத்திற்கு ஆளாவீர்கள், அம்மனின் அருள் பெறுங்கள்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான பேனர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Categories

Tech |