Categories
மாநில செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு… மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் இருப்பது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மர்ம நபர் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்ன இருக்கிறது என்பது பற்றி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று காலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக டிஜிபி, ஏடிஜிபி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து தடைய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து ஆணிகள், கோலிக்குண்டுகள் போன்றவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சனிக்கிழமை இரவு 11:25 மணியளவில் ஜமேஷா முபின் இல்லத்தில் இருந்து அவர் உட்பட ஐந்து பேர் மர்ம மூட்டையை எடுத்துச் சென்றுள்ளனர் இந்த காட்சி ஆனது அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது இதனை அடுத்து அந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவர்கள் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த மூட்டை என்னவாக இருக்கும் என்பது பற்றியும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |