Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… என்ஐஏ விசாரணை… இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பரிந்துரை…!!!!

கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது தற்போதைய நிலை பற்றியும் கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யவும் மாண்புமிகு முதல்வர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களின் விசாரணையில் மாநிலம் தாண்டிய பரிணாமங்களும் பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதனால் இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உயர் பரிந்துரைகளை செய்திட இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர்  இறையன்பு, இ ஆ ப உள்துறை கூடுதல் அமைச்சர் செயலாளர் திரு பணீந்திர ரெட்டி, இ ஆ ப காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சே சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |