Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… அப்சர் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஜெ எம்  நீதிபதி சந்தோஷ் முன்பாக ஆஜர்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் அப்சர்கானை நவம்பர் 10ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து போலீஸார் அப்சர்கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு அமைப்பாளர் என்ஐஏக்கு முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழக போலீசாரிடமிருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை NIA அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வேளையில் தமிழக காவல்துறை ஈடுபட்டிருப்பதாக கோவையில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |