கோவை மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் NIA அதிகாரிகள், முபின் 6 கோயில்களை நோட்டமிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.
PETN, நைட்ரோ கிளசரின் போன்ற அதிக வெடித்திறன் கொண்ட பொருட்களை சேகரித்தது எப்படி?, வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.