Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்…. 6 பேருக்கு நீதிமன்ற காவல்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட 6  பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த மாதம் 23-ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா மூபீன்  என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முபீன் வீட்டில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையதற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து போலீசார் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், முகமது நவாஸ்,  உள்ளிட்ட 6  பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இன்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 6  பேரையும் அழைத்து பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6  பேரையும் வருகின்ற 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Categories

Tech |