Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு!!…. பின்னணியில் இவ்வளவு பேரா?…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்….!!!!

கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான  ஐமேசா முபினின்  வீட்டில்  போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின்  திட்டமிட்டு இருந்தது  அம்பலமாகி உள்ளது. ஆனால் இந்த வெடிப்பொருட்களை முபின் யாரிடம் இருந்து எப்படி வாங்கினார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக முபின் வெடிப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2  ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிப்பொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்கள்  பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் ஆகியவற்றை முபின்  வாங்கி இருக்கிறார். இந்த பொருட்களை பயன்படுத்தி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு முகவரிகளில் இந்த வெடிப்பொருட்களை முபின்  வாங்கி இருப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் பலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். எந்தெந்த முகவரிகளில் வெடிப்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன  என்பது பற்றிய  விவரங்களை  சேகரித்துள்ள போலீசார் அந்த முகவரிகளில் வசித்து வருபவர்களுக்கு கார்வடிப்பில் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெடிப்பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் வழியாக அவர் பணம் செலுத்தி இருக்கும் ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். முபினும்  அவரது உறவினரான அசார், அப்துல் ஆகியோர் சேர்ந்து வெடிகுண்டுகளை தயாரிக்கும் முதல் கட்ட பயிற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இவர்கள் 3  பேரும் வெடிகுண்டுகளை தயாரிப்பது தொடர்பாக யூடியூப்களை பார்த்து பயிற்சி பெற்றிருக்கும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணையின் வேகத்தை மிகவும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Categories

Tech |