Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விசாரணை… “முதலில் அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்”… அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி…!!!!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் உரிமையாளர் இறந்தவர் பெயர் போன்ற புலன்விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் 24 மணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் துரிதமாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்திருக்கின்றனர்.

பதற்றம் நிலவுவது போல சிலர் செய்திகளை வெளியிடுவது கண்டனத்திற்குரியதாகும் சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இந்த சம்பவத்தில் பூதாகரமாக பார்க்கின்றனர் அதற்கு ஊடகங்கள் இடம் தரக் கூடாது. மேலும் இந்த சம்பவம் வருத்தப்படக் கூடியது குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எந்த விதமான ஒளிவு மறைவும் இல்லை யாரும் சொல்லி விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை. ராணுவ வீரர் உயிரிழப்பையே அரசியலாக முயற்சி செய்த நபர் தான் கோவை கார் வெடிப்பு சம்பவத்தையும் அரசியலாகி வருகின்றார். தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் காவல்துறையினர் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து கைது செய்வார்கள்.

மேலும் காவல்துறையினர் விசாரணை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே விசாரணை தொடர்பான தகவல்களை அண்ணாமலை வெளியிட்டு வருகிறார் என்றால் அவரிடம் தான் தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும். ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் சொல்வதை மக்களிடம் கொண்டு போனால் பதற்றம் ஏற்படக்கூடும் எதை தின்னால் பித்தம் தெளியும் என தெரிகின்றார்கள். முப்படை தளபதி இறப்பின் போது அந்த கட்சியினை சென்று அஞ்சலி செலுத்தினார்கள் விபத்து பற்றி விசாரிக்க சொன்னார்களா? அப்படித்தான் அரசியல் செய்ய பார்க்கின்றார்கள் கார் வெடிப்பு சம்பவத்தை அரசியலாகுகின்றார்கள். கோவையில் பந்து என்னும் பெயரில் பதட்டத்தை மக்களிடம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றார்கள். அதன் மூலமாக தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றார்கள் வெடி மருந்து தனியாக இருந்திருக்கிறது ஆணி தனியாக இருந்திருக்கிறது.

விபத்து ஒரு பக்கம் நடைபெற்றுள்ளது இது பற்றி முறையாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது அதைப்பற்றி பேசுவது முறையல்ல கார் வெடிப்பு சம்பவம் பற்றி வணிக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த இருக்கின்றோம் மேலும் அண்ணாமலைக்கு அடிப்படை அரசியல் பக்குவம் இல்லை புரிதலும் இல்லை. அவர் அரசிற்கு அவர் பெயர் கிடைக்காதா எனும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் மக்களுக்கான திமுக அரசை அரசு நடத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து வருகின்றோம் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். மேலும் கார் சம்பவத்தை தமிழகத்தில் அரசியல் ஆக்கி வருகிறது பாஜக இதன் மூலமாக தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றார்கள் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Categories

Tech |