கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் பாடுகாயம் அடைந்தார்கள். இதன் பிறகு நடந்த விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை கர்நாடகத்தின் டிஜிபி பிரவீன் சூட் தன்னுடைய ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த தீவிரவாத செயலுக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து பதிவிட்ட அண்ணாமலை, குண்டுவெடிப்பு சம்பவங்களை கையாளுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.
This is how a citizen is informed of what is happening & what the govt is doing
Unlike our @arivalayam govt, which mishandled & made the top cops lie in the Coimbatore ISIS Suicide Bomber case!The way @CMOTamilnadu handled the Coimbatore case is a lesson in incompetency! (1/3) pic.twitter.com/67XX9ImvNn
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) November 20, 2022
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதை டிவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். ISIS தீவிரவாதிகளின் கோவை தற்கொலை படை தாக்குதலுக்கு பிறகு உயர் காவல் அதிகாரிகளை திமுக அரசு பொய் சொல்ல வைத்துள்ளதாகவும், எவ்வாறு கையாளக்கூடாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.