Categories
மாநில செய்திகள்

கோவை குண்டு வெடிப்பு சம்பவம்… ரகசிய சந்திப்பு.. ஜமீஷா முபின் பற்றி அதிர்ச்சியான தகவல்…!!!!!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே கார் வெடித்த இடத்தில் இருந்து ஆணிகள், கோழி குண்டுகள், பாஸ்பரஸ், இரும்பு குண்டுகள் போன்றவை சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த இவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம், நைட்ரேட் சல்பர் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பின் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஐந்து பேர் ஒரு மூட்டையை தூக்கி சென்றது தெரியவந்துள்ளது. அதனால் அந்த ஐந்து பேரை பிடித்தால் உண்மை வெளிவரும் எனக் கூறப்பட்டது இந்த நிலையில் ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஐந்து பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர் அதில் ஜமேசா வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மர்ம மூட்டையில் இருந்த பொருட்கள் என்ன? அந்த மூட்டைகள் எங்கே? என்பது பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தனது வீட்டை காலி செய்ய வேண்டும் என ஜமேசா முபின் தங்களை அழைத்ததாகவும் அவருக்கு உதவி செய்ய சென்றதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதனை போலீஸர் ஏற்கவில்லை இதனை அடுத்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தமிழக போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் இவர் கேரள சிறையில் உள்ள முகமது அசாருதீனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை தனது whatsappபில் ஸ்டேட்டஸ் ஆக ஜமேஷா மூபின் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் முகமது அசாருதீன் என்பவர் 2019 ஆம் வருடம் இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் இவரை சந்திக்க தான் ஜமேசா சென்றிருப்பதாக கூறப்படுகிறது இதனால் வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

Categories

Tech |