Categories
மாநில செய்திகள்

கோவை : “கோவிலை பூட்டி கட்சி பிரமுகர்கள்”….. பெண் பக்தர்கள் ஆத்திரம்…..!!!!

சூலூர் அருகே கோவில் ஒன்றில் பெண்கள் வழிபாடு செய்த காரணத்தினால் மோதல் ஏற்பட கோவிலைப் மூடிபோட்டு போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கருத்தம்பட்டி பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு மாற்றப்பட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். விநாயகர் சிலை மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டதால் விநாயகர் கோவில் பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதை பார்த்த பெண் பக்தர்கள் சிலர் கோவிலை சுத்தம் செய்து பராமரித்து ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திமுக கட்சி பிரமுகர் ஒருவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இவ்வாறு வழிபாடு நடத்த கூடாது எனக் கூறி அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் பெண்களை விரட்டி கோவிலைப் பூட்டியதாக கூறப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோவில் திறக்கப்படாத நிலையில் ஆளும் கட்சி பிரமுகரிடம் பக்தர்கள் சிலர் கோவிலை திறக்க வலியுறுத்தி உள்ளனர். ஆனால் கோவிலை திறக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் பக்தர்கள் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் நடத்தி வரும் கோவிலை திமுக பிரமுகர் அவரது அடியார்களுடன் சேர்ந்து பூட்டி போட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |